முகப்புகோலிவுட்

“மது போதைக்கு அடிமையாய் இருந்தேன்” – கமல் மகள் ஸ்ருதி ஓபன் டாக்!

  | October 10, 2019 14:31 IST
Shruthi Haasan

துனுக்குகள்

 • விஜய்சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருகிறார் இவர்
 • காதலில் முறிவு குறித்து சமீபத்தில் அறிவித்திருந்தார் இவர்
 • மது போதைக்கு அடிமையாய் இருந்து தற்போது மீண்டுள்ளதாக கூறியிருக்கிறார்
 
விஸ்கிக்கு அடிமையாக இருந்ததாக கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுவந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
 
தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் இவர். மேலும் ஆங்கில இணைய தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.
 
காதல் தோல்வி..

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் சினிமாவை விட்டு விலகி இருந்தார். தனிப்பட்ட சில கசப்பான அனுபவங்களில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைய அடைய அவருக்கு ஓய்வு தேவைப் பட்டதாக கூறியிருக்கிறார். சமீபத்தில் பேசும் போது ஓய்வெடுத்ததற்கான காரணத்தைக் கூறியுள்ள ஸ்ருதிஹாசன், ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் தான் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்தேன்” என்றார்.ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு கட்டமராயுடு என்ற தெலுங்கு படம் வெளிவந்தது. அதன் பின் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com