முகப்புகோலிவுட்

‘ஆதித்ய வர்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | November 06, 2019 18:25 IST
Adithya Varma

துனுக்குகள்

 • ஆதித்யா வர்மா ‘ஏ’ சான்றிதழ் பெற்றது.
 • இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
 • தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் இப்படம்
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்  ‘அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தை தமிழில் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் கிரீசாயா. இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான தணிக்கை சான்று தொடர்பான தணிக்கை கடந்த வாரம் நடைபெற்றது. படத்திற்கு தணிக்கைக் குழுவினர் 'ஏ' சான்றிதழ்தான் தருவதாகச் சொன்னார்களாம். ஆனால், படத் தயாரிப்பினர் 'யு-ஏ' சான்றிதழ் வேண்டும் என்று கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் படத்தில் வன்முறைக் காட்சிகளும், முத்தக் காட்சிகளும் இருப்பதால்தான் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை நீக்கினால் கூட தெலுங்கிலும், ஹிந்தியிலும் பெற்ற வரவேற்பைப் பெற முடியுமா என்று படக்குழு யோசித்ததாகச் சொல்கிறார்கள். 'ஏ' சான்றிதழ் என்றால் குடும்பத்தினர் வர மாட்டார்கள், சாட்டிலைட் உரிமை விலை குறைவாகப் போகும் என்பதால்தான் பல தயாரிப்பாளர்களும் அவர்களது படங்களுக்கு எப்படியாவது 'யு-ஏ' சான்றிதழையாவது வாங்க முயற்சித்து, இறுதியாக 'ஏ' சன்றிதழே அளிக்கப்பட்டுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்ட உடனே இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் வரும் 21-ஆம் தேதி வெளியாகிறது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com