முகப்புகோலிவுட்

வாய்ப்பு வேண்டுமென்றால் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்- ஆதங்கப்பட்ட அதிதிராவ்.

  | December 28, 2018 17:28 IST
Aditi Rao Heydari

துனுக்குகள்

 • மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடையில் நடித்தவர்
 • கைகோ படத்தில் உதய்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
 • மீடு பிரச்னை நல்ல முன்னெடுப்பு
தமிழ், இந்தி, தெலுங்கு என ரசிகர்கள் மத்தியல் அவ்வப்போது திரையில் வந்து போகும் வால் நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருப்பவர் அதிதிராவ்.

இவர் தமிழில், காற்று வெளியிடை, செக்கசிவந்த வானம், தற்போது உதய்நிதியுடன் "சைக்கோ" படத்தில் நடித்துவருகிறார். செவ்விதழின் சிரிப்பால் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அதிதிராவ்.

சமீபத்தில் விசாகப்பட்டடினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிதிராவ் கலந்து கொண்டார். இதில் மீடு குறித்தும் , திரையுலகில் இருக்கு பாலியல் பிரச்னை குறித்தும் இவ்வாறு பேசினார்.
“நான் வீட்டில் கட்டுப்பாட்டுடன் வளர்ந்தேன். இதனால் சினிமா துறைப் பற்றி பெரியளவில் எனக்கு ஒன்றும் தெரியாது.

திரைத்துறையில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பது பற்றி
எனக்கு அவ்வளவாக தெரியாது.

ஆனால் அவை நடந்து கொண்டு இருந்தன. எனக்கு அதுபோன்று மோசமான பெரிய அனுபவம் நடக்கவில்லை என்றாலும் ஒரு சம்பவம் என்னை அதிர வைத்தது. பட வாய்ப்பு வேண்டுமென்றால் அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றனர்.

எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு தேவை இல்லை என்று விலகி விட்டேன். அந்த சம்பவத்துக்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு எந்த படங்களும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். இந்த பிரச்னையில் மீடு நல்ல முன்னெடுப்பாக இருந்தது. ஆனால் இப்போது ‘மீ டு' இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது” என தனது வாழ்கையில் நடந்து அனுபத்தை கூறினார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com