முகப்புகோலிவுட்

ஜி.வி.பிரகாஷின் ‘ஜெயில்’ படத்துக்காக அதிதி ராவ் எடுத்த புதிய அவதாரம்

  | December 05, 2018 12:41 IST
Aditi Rao Hydari

துனுக்குகள்

 • ஜி.வி.பி இசையமைப்பாளராக அறிமுகமான படம் வசந்தபாலனின் ‘வெயில்’
 • ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார்
 • ‘காற்று வெளியிடை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி
‘செம' படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, குப்பத்து ராஜா, ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், ஜெயில், காதலை தேடி நித்யா நந்தா, வாட்ச்மேன், சசி படம்' என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது. இதில் ‘ஜெயில்' படத்தை வசந்தபாலன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான படம், வசந்தபாலனின் ‘வெயில்' என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மூலம் ஃபேமஸான அபர்ணதி நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், ‘பசங்க' பாண்டி, ‘பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பி-யே இசையமைக்கும் இதற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 


சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘காத்தோடு' என்ற பாடலை ‘காற்று வெளியிடை' படத்தின் ஹீரோயின் அதிதி ராவ் ஹைதரி பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிதி ராவ் பாடியுள்ள முதல் பாடல் இதுதானாம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com