முகப்புகோலிவுட்

“அசுரன்” வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர்!

  | October 17, 2019 14:51 IST
Vetrimaran

துனுக்குகள்

  • அசுரன் படம் 100 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது
  • ரெட்லெட் குமர் இப்படத்தை தயாரிக்கிவிருக்கிறார்
  • அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் உருவாக இருக்கிறது
அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றி மாறன் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.
 
விமர்சன ரீதியகாவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெரும் படங்கள் மிகக்குறைவு. அந்த வகையில், தான் கையில் எடுத்த எல்லா கதைகளத்தையும் விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றிகளை பெற்று கொடுத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். தன்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லாமல் வெற்றியையும் லாபத்தையும் பெற்றுதந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றி மாறன் தயாரிப்பாளர் எல்ரெட் குமாருடன் முதல் முறையாக இணைகிறார்.
 
சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தை இயக்கிய வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்ததாவது...
ஒரு தயாரிப்பாளர் என்பதற்கும் மேலாக சினிமா ரசிகன் என்ற முறையில் வெற்றி மாறன் போன்ற இயக்குநருடன் பணி புரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், கலையம்சம் மிக்க படங்களுக்கும், வணிக ரீதியான படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கும் அரிதான இயக்குநர்களில் வெற்றி மாறனும் ஒருவர்.

அவரது படங்களின் உள்ளடக்கம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதுடன், வணிக வெற்றிக்குத் தேவையன அம்சங்களைக் கொண்டதாகவும் இருப்பதால்தான், தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி மொழி எல்லைகளைத்தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்கிறது. இதற்கான சமீபத்திய சான்றாக அமைந்திருக்கும் அசுரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து மற்றுமொரு மிகச் சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக்கலைஞர்கள் ஆகியவற்றுடன் மேலதிக விவரங்களை அறிவிக்கிறோம்.

வழக்கமான பாணியிலான படங்களாக அல்லாமல் மாறுபட்ட கதைக்களன் கொண்ட படங்களைத் தரும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் அடுத்த படைப்பு வெற்றி மாறன் முத்திரையுடன் வருவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்