முகப்புகோலிவுட்

பிக்பாஸ் போட்டிக்கு பின் கவினுக்கு அடித்த ஜாக்பாட்! படு குஷியில் கவின் ஆர்மி!

  | October 23, 2019 16:18 IST
Bigboss

துனுக்குகள்

 • கவின் தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறார்
 • பிக்பாஸ் போட்டியில் முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்
 • கவின் ஆர்மி தற்போது படு குஷியில் உள்ளனர்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு நேர்மையான விமர்சனங்களை பெற்றவர் கவின். இவர் குறித்து தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது.
 
வெகு விமர்சையாக நடைபெற்று வந்த பிக்பாஸ் போட்டியில் அதிக ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்கள் சாண்டி, கவின், தர்ஷன், முகென். வி ஆர் தி பாய்ஸ் என இவர்களின் அட்டகாசமும் நய்யாண்டியும் வெகுஜன மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த போட்டியில் கவின் 5 லட்சம் பணத்தோடு போட்டியில் இருந்து தானாகவே வெளியேறினார். முகென் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சாண்டி ரன்னர் பட்டத்தை கைப்பற்றினார்.
 
போட்டி முடிந்த பிறகும் பிக்பாஸ் போட்டியாளர்களில் வி.ஆர்.தி.பாய்ஸ் குறித்து செய்திகள் தொடர்ச்சியாக வந்துக்கொண்டிருக்கிறது. இவர்கள்  பெரும்பாலும் எல்லா பொது நிகழ்சிகளுக்கு ஒன்றாகவே கலந்துக்கொண்டு அரங்கத்தையே கலகலப்பாக்கி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சாண்டி, தர்ஷன் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.கவின் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளான் என சாண்டி கூற கவின் ஆர்மி படு சந்தோஷத்தில் உள்ளனர்.  முகென் மலேசியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கவின் நடிக்கும் அந்த படத்தை யார் இயக்குகிறார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com