முகப்புகோலிவுட்

முடிந்தது சோதனை - மீண்டும் களமிறங்கிய 'மாஸ்டர்' விஜய்

  | February 10, 2020 10:35 IST
It Raid Ags Entertainment Offices

நெய்வேலியின் இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார்.

துனுக்குகள்

  • இரண்டு நாட்களாக விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
  • விஜய் இல்லாமல் மற்ற நடிகர்களை கொண்டு மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து வந்தது
  • நெய்வேலி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய்
பிகில் படத்தின் வசூல் குறித்து கடந்த புதன் அன்று நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது விஜய் தனது புதிய படமான ‘மாஸ்டர்' படப்பிடிப்பிற்காக நெய்வேலி சென்றிருந்தார். வருமான வரித்துறை சோதனை நடப்பதை அறிந்த விஜய், உடனடியாக தனது வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களும் விஜய் இல்லாமல் மற்ற நடிகர்களை கொண்டு மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் நடந்த சோதனை முடிக்குவரவே, மீண்டும் தனது நடிப்பு பணியை தொடங்கியுள்ளார் விஜய். 

நெய்வேலியின் இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்' படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் சென்னையில் இருந்து கார் மூலம் நெய்வேலி வந்தார். நேற்று காலை 11 மணியளவில் மாஸ்டர் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டை கட்சியில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் மோதும் காட்சி படமாக்கப்பட்டது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்