முகப்புகோலிவுட்

படம் வெளியாவதில் சிக்கல்? “பிகில்” படத்தின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு!

  | October 17, 2019 14:45 IST
Bigil

துனுக்குகள்

 • தீபாவளி அன்று படம் வெளியாக இருக்கிறது
 • கதை திருட்டு வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது
 • மீண்டும் இந்த வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது
பிகில் படத்தின் எல்லா பணிகளும் நிறைவடைந்து தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் ‘பிகில்' படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை மீண்டும் ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
 
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘பிகில்'. இப்படத்தின் கதை தன்னுடையது என இயக்குநர் கே.பி. செல்வா என்பவர் உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
 
இதனை அடுத்து சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு மிகபிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் பேசிய கருத்துக்ள அரசியல் தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த படம் வெளியிடுவதில் சிக்கல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து எங்களுக்கு படத்தை வெளியிட எந்த அரசியல் கட்சியின் தலையீடும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் இந்த முறை பிரச்னை வேறு வழியாக வந்துள்ளது.
 
குற்றவியல் நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்து செல்வா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. குற்றவியல் நீதிமன்றத்தி தாக்கல் செய்த ஆவணங்களை தரக்கோரி இன்று விசாரனை ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நாளை ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இந்த வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே திரையிடும் தேதி உறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com