முகப்புகோலிவுட்

நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் இணையும் தனுஷ்?

  | November 07, 2019 12:29 IST
Director Selvaragavan

துனுக்குகள்

 • செல்வரகவன் இயக்கிய என்.ஜி.கே. படம் சமீபத்தில் வெளியானது
 • தற்போது ஆடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறர் இவர்
 • மீண்டும் இவர் தனுஷுடன் இணையவிருக்கிறார்
எல்லா இயக்குநர்களின் படங்களும் எதிர்பார்ப்புகளோடு இருப்பதில்லை. தமிழ் சினிமாவில் அப்படி அதிக எதிர்பார்ப்புகளோடு இருக்கும் ஒரு சில இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் செல்வராகவன்.
 
இவர் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படம் தொடங்கி சமீபத்தில் வெளியான என்.ஜி.கே வரை பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியானதுதான். 7ஜி, ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் இன்னும் தமிழ் சினிமாவில் விவாதத்திற்குட்படும் படங்களாக இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
 
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் இவர் இயக்கத்தில் வந்த படம் என்.ஜி.கே அடிப்படை அரசியலில் உள்ள சூச்சமங்களை அம்பலப்படுத்திய படமாக அமைந்தது. இந்த படம் கலரவயான விமர்சனங்களை பெற்று புதிராக மாறியது.
 

இந்த நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷை இயக்க உள்ளாராம் செல்வராகவன். தற்போது திரைக்கதை பணியில் செல்வராகவன் இறங்கியுள்ளார். இது குறித்த அப்டேட்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தனுஷ் படத்திற்கான பணிதான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். செல்வராகவன் தனுஷ் கூட்டணி என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இருக்கும் என்பது அனைவரின் கருத்து. இதே போல் புதுப்போட்டை2 வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பொருத்திருந்து பார்ப்போம்!!
 
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com