முகப்புகோலிவுட்

வைரலாகும் “நேர்கொண்ட பார்வை” படத்தின் “அகலாதே” பாடல்!

  | August 13, 2019 16:11 IST
Agalaathey

துனுக்குகள்

  • யுவன் சங்கர் ராஜா இப்பாடலை பாடி இருக்கிறார்
  • அஜித், வித்யா பாலன் காதலை வெளிப்படுத்தும் பாடல் இது
  • டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது இப்பாடல்
கடந்த வாரம் 8ம் தேதி வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை'. அஜித், வித்யா பாலன், ஸ்ர்த்தா ஸ்ரீநாத், அபிராமி இன்னும் பலர் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து இருக்கிறார்.
 

 
படம் வெளியான நாள் முதல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியில் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற படம் ‘பிங்க்'. இப்படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நேர்கொண்ட கொண்ட பார்வை படத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சில மாற்றங்களோடு இயக்கி இருந்தார் எச்.வினோம். அதில் ஒரு மாற்றம்தான் இப்படத்தில் இடம் பெறும் ‘அகலாதே' பாடல். இந்த பாடல் அஜித், மற்றும் வித்யா பாலனின் காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. தற்போது படக்குழு இதன்  முழு பாடலையும் யூ டியூபில் வெளியிட்டிருக்கிறது. வெளியிட்ட சிறிது நேரத்தில் வைராகத் தொடங்கியது. தற்போது இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து பாடியும் இருக்கிறார்.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்