முகப்புகோலிவுட்

“மறக்கமுடியாத் தருணம்” விஜயின் ‘பிகில்’ பட தயாரிப்பாளர் போட்ட ஹாப்பி ட்வீட்.!

  | September 19, 2020 21:45 IST
Vijay

தளபதி விஜய் சார், ஏ.ஆர் ரகுமான் சார், இயக்குநர் அட்லீ, நயன்தாரா மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள, பிகில் படம், தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்ததாகவும், மேலும் மொத்தமாக பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடி வசூலித்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன.

இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷிராஃப், வர்ஷா பொல்லம்மா, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரகுமான இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவெல் ஹிட்டானது. இப்படத்தின் ஆடியோ அறிமுகமாகி இன்று ஒரு வருடத்தைக் குறிக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஏக்கமான, மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

ஆடியோ லான்ச்சின் மேடையில் விஜய் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்ட அர்ச்சனா, “ஒரு மறக்கமுடியாத தருணம். இதை நான் ஒருபோதும் சொல்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் நான் உண்மையில் புதுப்பிப்புகளைக் கொடுப்பதை இழக்கிறேன். நமது தளபதி விஜய் சார், ஏ.ஆர் ரகுமான் சார், இயக்குநர் அட்லீ, நயன்தாரா மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் #1YearOfBigilAudioLaunch” எனப் பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com