முகப்புகோலிவுட்

கார்த்திக் சுப்புராஜ்- தனுஷ் கூட்டணியில் இணைந்த மலையாள நடிகை!

  | July 20, 2019 12:42 IST
Dhanush

துனுக்குகள்

 • தமிழில் விஷாலுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் இவர்
 • திருநாவுக்கரசர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
 • ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ‘போட்ட' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்கவிருக்கிறார் என்கிற செய்திகள் வெளியாகின. தற்போது இந்த படத்தை இயக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
 
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது..
இந்த படத்தில் இணைந்திருக்கும் மளையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, மலையாளத்தில் ‘மாயாநதி',' வரதன்', ‘பிரதர்ஸ்டே' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


o8bnjemo

தமிழில் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுளார். இதனை அடுத்து கார்த்திக் சுப்ராஜ்- தனுஷ் கூட்டணியில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது 18வது படைப்பாக ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
 
 
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
கார்த்திக் சுப்பாராஜ்  எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக  சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார்.
 
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்.
 
 
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com