முகப்புகோலிவுட்

தமிழில் குருவுடன் பணியாற்றுவதை உறுதி செய்த ஐஷ்வர்யா ராய்…!

  | May 25, 2019 15:37 IST
Aishwarya Rai Bachchan

துனுக்குகள்

  • பொன்னியின் செல்வன் படத்தை இயக்குகிறார் மணிரத்னம்
  • கார்த்தி, ஜெயம் ரவி இன்னும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்
  • ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கி வேடத்தில் நடிக்கிறார்
கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். பெரும் நட்சத்திரங்களான நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
 
பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிப்பதாக கூறப்பட்டது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஷ்வாயா ராய் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
 
ஆனால் இப்படம் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகத நிலையில் அண்மையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இது தொடர்பாக பேசிய அவர் “ மணிரத்னம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போது, இந்த செய்தி வெளியில் கசிந்து விட்டது. அவர் படத்தில் நான் வேலை செய்வது உண்மை தான். என் குருவுடன் வேலை செய்வதில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி தான். நான் உற்சாகமாக, ஆர்வமாக, மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன்” என்று தெரிவித்தார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்