முகப்புகோலிவுட்

காதல் விவகாரம் மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

  | May 11, 2019 17:18 IST
Aishwarya Rajesh

துனுக்குகள்

 • சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பாண்டிராஜ் படத்தில் நடிக்கிறார்.
 • இப்படத்திற்கு டி. இமான் இசை அமைக்கிறார்.
 • சிவகார்த்திகேயன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
காக்கா முட்டை படத்தில் தன்னுடைய எதார்த்த நடிப்பில் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனைத்தொடர்ந்து தர்மதுரை, வடசென்னை, சாமி ஸ்கொயர், செக்கச் சிவந்த வானம் என அடுத்தடுத்த வாய்ப்புகளை தன் வசம் ஆக்கினார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "கனா" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் காதலில் விழுந்துவிட்டதாக செய்திகள் வெளியானது
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘நான் காதலிப்பதாக செய்திகள் பரவி வருவதை கேள்விப்பட்டேன். தயவு செய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன். சிங்கிளாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com