முகப்புகோலிவுட்

‘கைதி’ பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் டாப் ஹீரோ..!

  | December 04, 2019 14:03 IST
Kaithi

துனுக்குகள்

  • கைதி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
  • இப்படத்துக்கு சி.எஸ் சாம் இசையமைத்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான கைதி திரைப்பட ஹிந்தி ரீமேக் உரிமத்தை பாலிவுட் டாப் ஹீரோ பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘கைதி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் எஸ்.ஆர். பிரபு தயாரித்த இப்படத்தில் நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், கே.பி.ஒய் தீனா, ரமணா, பேபி மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சி.எஸ். சாம் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகரான விஜயின் ‘பிகில்' திரைப்படத்துடன் ஒரே நேரத்தில் மோதியும் வைரல் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க படக்குழு முடிவெடுத்தது.
அதையடுத்து கைதி திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது. லோகேஷ் கனகராஜ் தற்போது ‘தளபதி 64' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கிடையில், கைதி பட ஹிந்தி ரீமேக் உரிமத்தை பாலுவுட் டாப் நடிகர்களில் ஒருவரான அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாகவும், அதில் அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் தளபதி 64 படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றபோது, லோகேஷ் கனகராஜ் கைதி ரீமேக் குறித்து அஜய் தேவ்கன்னை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்