முகப்புகோலிவுட்

ரஜினிக்கு நிகர் அஜித் தான்.., விஜய் அல்ல - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

  | February 15, 2020 21:02 IST
Vijay

"ரஜினிக்கு இணை என்றால் அது அஜித் மட்டும் தான், அவர்கள் இருவர் மட்டும் தான் ஜல்லிக்கட்டு காளைகள்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ரஜினி மலை, அஜித் தல என்றும் விஜய் ரஜினிக்கு இணையல்ல என்றும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக பட்ஜட் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர் “நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை”, ரஜினிக்கு நிகரான நடிகர் இப்போதைய நடிகர்கள் யாரும் இல்லை, ரஜினிக்கு இணை என்றால் அது அஜித் மட்டும் தான், அவர்கள் இருவர் மட்டும் தான் ஜல்லிக்கட்டு காளைகள், ரஜினி - மலை, அஜித் - தல” என்று பேசியுள்ளார். இதனால் அஜித் - விஜய் ரசிகர்களீடையே பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்