முகப்புகோலிவுட்

"அஜித் திராவிட முன்னேற்ற கழகம்" வைரலாகும் வால்போஸ்டர்..!

  | November 27, 2019 08:27 IST
Ajith New Look

துனுக்குகள்

 • அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
 • இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார்.
 • இப்படத்தை போணி கபூர் தயாரிக்கிறார்.
அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்று நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் அச்சிடப்பட்ட சுவரொட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசியலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, தானுண்டு தனது வேலை உண்டு என்று வாழ்பவர் நடிகர் அஜித்குமார். எந்த ஒரு பொது நிகழ்விலும் கூட கலந்து கொள்ளாமல், தனது குடும்பம், துப்பாக்கி சுடுதல் போட்டி, ஏரோமாடலிங் என தனக்கே பிடித்தமான செயல்களில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு தலைவலி கொடுக்கும் விதமாக, அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்று அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
தமிழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், மதுரை மாநகரத்தில் மேயர் பதவிக்காக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரைட் சுரேஷ், அதிமுகவிற்கு விரிவாக்கமாக ‘அஜித் திராவிட முன்னேற்ற கழகம்' என்று குறிப்பிட்டு அஜித்தின் புகைப்படத்தோடு ஓட்டு கேட்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் “மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் உங்கள் வீட்டுப்பிள்ளை ரைட் சுரேஷ் அவர்களுக்கு, நமது வெற்றி சின்னம் உழைப்பாளி சின்னத்தில், உங்கள் பொன்னான வாக்குகளை வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இப்படிக்கு “உங்கள் வெற்றி வேட்பாளர் ரைட் சுரேஷ், மதுரை மாநகர் அஜித்.தி.மு.க“ என அச்சிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த சுவரொட்டி அஜித் ரசிகர்களையும், மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com