முகப்புகோலிவுட்

மேடையில் மகள் நடிப்பதை, கூட்டத்தில் ஒருவராக பார்த்து ரசிக்கும் ‘தல’ அஜித்.! வைரலாகும் வீடியோ..

  | July 03, 2020 16:19 IST
Thala Ajith

நல்ல கணவனாகவும், தன் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்க என்று தவறாதவர் 'அஜித்' என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்துடன், அசைக்க முடியாத உச்சத்தில் கொடிகட்டி பரக்கும் ஒருவர், 1990ம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றி, அதன் பிறகு காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக இறுதியில் அன்பு ரசிகர்களின் ‘தல'யாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் ‘அஜித் குமார்' என்ற தனி மனிதன்.  

மற்றவர்களிடம் அன்பையும் மரியாதையையும் என்றும் காட்டத்தவறாத நல்ல மனிதர், தன் உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு கோலிவுட்டில் உயர்ந்து நிற்கும் சிறந்த நடிகர் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல கணவனாகவும், தன் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்க என்று தவறாதவர் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.

அவரது குழந்தைகளுக்காக நேர செலவிடு பல செய்திகளையும், வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் நாம் பார்க்கிறோம்.

அதேபோல், இப்போது பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் தனது மகள் நடிப்பதைப் அஜித் நின்று பார்க்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தனது மகள் அனோஷ்கா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் முயல் போல வேடமிட்டு மேடையில் நடிக்கிறார், அதனை கூட்டத்தில் ஒருவராக ஒரு சாதாரண தந்தையாக மகளைப் பார்த்து ரசிக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com