முகப்புகோலிவுட்

அஜித் குமாரின் ‘வலிமை’ – வெளியான புதிய அப்டேட் ?

  | February 09, 2020 13:35 IST
Ajith  Kumar

அமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ‘தல’ அஜித் நடித்திருந்தார்

துனுக்குகள்

  • அமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ‘தல’ அஜித் நடித்திருந்தார்
  • தற்போது இந்த படத்தை குறித்த புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது
  • அஜித் குமாரின் ‘வலிமை’ – வெளியான புதிய அப்டேட் ?
நேர்கொண்ட பார்வை, ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் அமிதாபச்சன் நடித்து வெளியான பிங்க் திரைபடத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். பிங்க் படத்தில் அமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ‘தல' அஜித் நடித்திருந்தார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் எச். வினோத் தற்போது மீண்டும் அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த படத்தின் படபிடிப்பு பணிகள் சிறப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தை குறித்த புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. வலிமை திரைப்படம் இந்த 2020ம் ஆண்டு திபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில் தீபாவளி வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் வலிமை திரைப்படம் நவம்பர் 12ம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்