முகப்புகோலிவுட்

அஜித்தின் 'வலிமை' திரைப்படத்தின் புதிய அப்டேட்!

  | October 19, 2019 15:08 IST
Ajithkumar

துனுக்குகள்

 • நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது
 • இப்பத்திற்கு யுவன் இசை அமைக்கவிருக்கிறார்
 • வரும் டிசம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  

'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்தின் 60வது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு 'வலிமை' என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளது அதன்படி இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்தப் படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார்.
 
போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் கார் மற்று பைக் பந்தையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இடம் பெறும் என முன்னதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். இதனால் தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com