முகப்புகோலிவுட்

கோட் சூட் அணிந்து அஜித்தின் நியூ லுக்! வைரலாகும் செல்ஃபி போட்டோஸ்!

  | October 12, 2019 13:10 IST
Ajith

துனுக்குகள்

  • அஜித் தனது 60 படத்தில் நடிக்கி இருக்கிறார் இதனை எச்.வினேத் இயக்குகிறார்
  • இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் நடிக்கிறார்
  • இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் அஜித்?
அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்த மீண்டும் எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைந்துள்ளார்.  பெண்களின் பாலியல் உரிமை குறித்து வலுவான வாதங்களை முன்வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு இந்தியில் வெளியான ‘பிங்க்' படத்தின் ரீமேக்கை அதன் உயிர் சிதையாமல் எடும் பெரும் பாராட்டுகளை பெற்றார் இயக்குநர் எச்.வினோத்.
 
இந்த படத்தை அடுத்து மீண்டும் போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60' திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்க்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றன. இந்நிலையில், விமான நிலையத்தில், தனது வழக்கமான சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக, க்ளீன் ஷேவ் செய்து கருமையான முடியுடன், கோட் சூட் அணிந்து வந்த அஜித்குமாரை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஒரு ரசிகரின் மெபைல் போனை வாங்கி அஜித்தே செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்