முகப்புகோலிவுட்

அமிதாப் வேடத்தில் வலம் வரும் அஜித்……!

  | February 11, 2019 18:12 IST
Thala Ajith

துனுக்குகள்

  • யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
  • ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்
  • அமிதாப் பட்சன் வேடத்தில் அஜித் நடிக்கிறார்
இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் “பிங்க்”.  டாப்சி, அமிதாப் இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தற்போது தமிழில் மொழிபெயர்த்து தயாரிக்கிறார்   மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்.  யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
 
இந்த படத்தில் அமிதாப் பட்சன் வேடத்தில் அஜித் நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தில் நடித்து வரும் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இந்த முயற்சி படத்திற்காகவா அல்லது அவரது தனிப்பட்ட விருப்பமா என்பது பற்றி தகவல்கள் இன்னும் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது வெளியான புகைப்படங்களில் அஜித்தின்  லுக் மற்றும் கெட்- அப், பிங்க் படத்தில் நடித்திருந்த அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தைப் போன்றே அமைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.
 
இந்தப் படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க - "அஜித், விஜய், கமல்; யாருக்கு என்ன கதை கார்த்திக் சுப்புராஜ்"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்