முகப்புகோலிவுட்

வீட்டு கரண்ட் பில்லை கண்டு திகைத்து போன ‘வலிமை’ பட நடிகை.!

  | June 29, 2020 16:33 IST
Huma Quershi

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் 'காலா' படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஹூமா குரேஷ்.!

பிரபலங்கள் உட்பட நாட்டில் பலர் கடந்த இரண்டு வாரங்களாக உயர்த்தப்பட்ட மின்சார கட்டணங்களை எதிர்கொண்டுள்ளனர். நடிகர் பிரசன்னா, நடிகை கார்த்திகா நாயர், டாப்ஸி பன்னு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த விஷயத்தில் ட்விட்டரில் குரல் கொடுத்துள்ள நிலையில், இப்போது ரஜினியின் ‘காலா' பட நடிகை ஹூமா குரேஷி, பல மடங்காக உயர்ந்த தனது மின்சார பில் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதம் ரூ. 6,000 செலுத்திய நிலையில், இந்த மாதம் அவரது மின்சார பில் ரூ. 50,000 வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பையில் உள்ள அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவனத்தைக் குறிப்பிட்டு “இந்த புதிய மின்சார விகிதங்கள் என்ன?? கடந்த மாதம் நான் 6K செலுத்தினேன்.. இந்த மாதம் 50K ????!!! இந்த புதிய விலை உயர்வு என்ன? தயவுசெய்து எங்களுக்கு அறிவூட்டுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஹூமா குரேஷி தற்போது ‘தல' அஜித்தின் வலிமை திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், Army of the Dead எனும் ஹாலிவுட் ஜாம்பி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் போஸ்ட் ப்ரொடக்‌ஷனில் உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com