முகப்புகோலிவுட்

“தல60” படத்தில் அஜித்திற்கு என்ன ரோல் தெரியுமா? அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் அஜித்!

  | August 26, 2019 17:44 IST
Ajith

துனுக்குகள்

 • இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்
 • இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்துள்ளார்
 • ஹெச்.வினோத் இந்த படத்தை இயக்குகிறார்
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணந்துள்ளது. அதன் அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்தார்.
 
இந்த படத்தில் பைக் மற்றும் கார் பந்தையத்திற்கு முக்கியத்துவம்  இருக்கும் என்று போனிகபூர் அறிவித்திருந்தார். இதனால் இந்த படத்தில் அஜித் ரேஸசராக நடிக்கிறார் என்று வதந்தி பரவியது.
அஜித் இந்த படத்திற்காக உடல் எடையையும் குறைத்து ஸ்மார்ட்டாகி இருக்கிறார்.
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாக பரவியது. அப்போது கின்னஸ் சாதனையாளர் குற்றாலீஸ்வரன் அஜித்தை சந்தித்த போட்டோ ஒன்று வெளியாகி வைரலானது. இதனை அடுத்து அஜித் நடிக்கும் இந்த படம் விளையாட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்படும் படம் என்றும் இதில் அஜித் ஸ்போர்ட்ஸ் மேனாக நடிக்கிறார் என்றும் வதந்திகள் பரவியது. இந்நிலையில் தற்போது அஜித் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. என்னை அறிந்தால், மங்காத்தா, படங்களில்  அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் விரைவில் இப்படம் குறித்த செய்திகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com