முகப்புகோலிவுட்

விஜய் ஆண்டனி- அருண் விஜய் கூட்டணியில் இணைந்த அக்ஷரா ஹாசன்?

  | October 04, 2019 14:57 IST
Arun Vijay

இந்தப் படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஒப்பந்தமாகியிருக்கிறார்

ம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள்'.  இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
 
 இந்தப் படத்தில் இந்தியாவில் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகளுக்கான முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்கியது.
ஆக்‌ஷன், சேஸிங் பயணமாக இருக்கும் இப்படம் இஸ்தான்புல் பகுதியில் துவங்கி நார்வே மலைப்பகுதிகளில் முடிகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர். அதற்கான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தமிழில் அஜித்துடன் 'விவேகம்' மற்றும் விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஒப்பந்தமாகியிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பை முடித்து படத்தை திரைக்கு கொண்டுவரவும் படக்குழு முடிவு செய்துள்ளது.
 
இயக்குநர் நவீன் இயக்கி நடித்துள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமிரா' திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்