முகப்புகோலிவுட்

‘தனுஷ் சார் என் மேல வச்ச நம்பிக்கை தான்’ – மேடையில் நெகிழ்ந்த சிவகர்த்திகேயன்

  | February 09, 2020 13:25 IST
Sivakarthikeyan  Speech

என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்

துனுக்குகள்

  • ‘தனுஷ் சார் என் மேல வச்ச நம்பிக்கை தான்’ - சிவகர்த்திகேயன்
  • என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்
  • இந்த எட்டு வருட சினிமா வாழ்கை பல விஷயங்களை கற்றுகொடுதுள்ளது
தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகர்த்திகேயன், கனா படத்தை தயாரித்ததை குறித்து, பலரும் என்னை புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் எதிர் நீச்சல் படத்தில் என் மீது துன்ஷ் அவர்கள் வைத்த நம்பிக்கை தான், நான் என் நண்பன் அருண்ராஜா (கனா படத்தின் இயக்குனர்) மீது நம்பிக்கை வைக்க காரணமாக அமைந்தது என்று கூறி நெகிழ்ந்தார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தை பற்றி பேசிய அவர், அந்த படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் கட்சியில் என் நடிப்பு பலரை கண்கலங்க வைத்ததாக கூறினார்கள். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த எட்டு வருட சினிமா வாழ்கை பல விஷயங்களை கற்றுகொடுதுள்ளது, நானும் கற்றுக்கொண்டேன் என்று கூறினார். எனது நண்பன் அருண்ராஜா காமராஜ், ஒரு மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுக்க இருக்கிறார், அதை குறித்த தகவல் விரைவில் வரும் ஆனால் அதை பற்றி நான் இப்போது பேசக்கூடாது என்று கூறினார்.     
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்