முகப்புகோலிவுட்

'அண்ணன் காட்டுக்கு மன்னன்' - ராம் சரணுக்கு ஜூனியர் NTR கொடுத்த பிறந்தநாள் பரிசு

  | March 28, 2020 08:42 IST
Ram Charan

துனுக்குகள்

 • ரத்தம் ரணம் ரௌத்திரம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த
 • சில காரணங்களால் இந்த வீடியோ வெளியாவதால் தாமதம் ஏற்பட்டது
 • நிச்சயம் இது ஒரு period film என்பதில் சந்தேகமில்லை
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்'. பிரபாஸின் ‘பாகுபலி' திரைப்படத்தையடுத்து ராஜமௌலி இயக்கத்தில் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக  ‘ஆர்.ஆர்.ஆர்' அமைந்துள்ளது. இந்த படம் 2021 ஜனவரி 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தம் ரணம் ரௌத்திரம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்த படத்திற்குத் தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். மேலும் இன்று ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஒரு surprise வீடியோ ஒன்றை இன்று காலை 10 மணிக்குப் பரிசளிக்க உள்ளதாக நேற்று இரவு ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த வீடியோ வெளியாவதால் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த வீடியோ பரிசை தான் ராமிற்கு சரியாக மாலை நான்கு மணிக்குத் தருவதாக என்.டி.ஆர் கூறினார். 

அவர் கூறியவாறே தற்போது சரியாக 4 மணிக்கு அந்த surprise வீடியோவை ராம் சரணுக்கு அளித்துள்ளார் அவர். நான்கு மொழிகளிலும் வெளியாகி உள்ள வீடியோவில் போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார் ராம் சரண். நிச்சயம் இது ஒரு period film என்பதில் சந்தேகமில்லை என்பது இந்த வீடியோ மூலம் நிரூபணமாகியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com