முகப்புகோலிவுட்

பல கோடி மதிப்புள்ள கேரவன் வாங்கிய அல்லு அர்ஜுன்! மக்களின் அன்பே காராணம் என நெகிழ்ச்சி!

  | July 06, 2019 16:23 IST
Allu Arjun

துனுக்குகள்

 • துவாடு ஜகநாதம் படத்தில் நடித்திருந்தார் இவர்
 • தற்போது ஐகான் என்கிற படத்தில் நடித்து வருகிறார்
 • வேனு ஸ்ரீராம் ஐகான் படத்தை இயக்கி வருகிறார்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிள் ஒருவராக இருப்பவர் அல்லூ அர்ஜுன். இவர் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதற்கு தற்காலிக பெயராக ஏஏ19, ஏஏ20 என்று பெயரிடப்பட்டுள்ளது.  மேலும் வேனு ஸ்ரீராம் இயக்கும் ஐகான் படத்திலும் நடித்து வருகிறார் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
 
இந்நிலையில் இவர் விலைஉயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதன் உள் மற்றும் வெளி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வாகனத்திற்கு ஃபால்கான் என்று பெயரும் வைத்திருக்கிறார்.
 
 
 சுமார் 3.5 கோடிக்கு ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ள இந்த கேரவனுக்கு ஃபால்கன் என்று பெயரிட்டுள்ளார் அல்லூ அர்ஜூன். மேலும் ஆங்கிலத்தில் ஏஏ என்று தன்னுடைய சிம்பிளை அதில் பதித்துள்ளார். ரூ 3.5 கோடிக்கு வாங்கிய இந்த கேரவனுக்கு மேலும் கூடுதலாக ரூ. 3.5 கோடியை டிசைனிற்காக செலவு செய்துள்ளார் அல்லூ அர்ஜூன்.
 
இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளது, “என் வாழ்க்கையில் நான் பெரிதாக எதையாவது ஒன்றை வாங்கினால் . எனக்கு ஒன்றே ஒன்றுதான் என் நினைவில் தோன்றும். அது என்ன என்றால்,  ‘மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது' மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com