முகப்புகோலிவுட்

"ஏற்கனவே ரெண்டாவது இடத்துல இருக்கோம்" - சாந்தனு சொல்லும் கருத்து

  | April 06, 2020 11:37 IST
Shanthanu

துனுக்குகள்

 • இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் சரியாக 9 மணிக்கு
 • பிரதமரின் இந்த அறிவிப்பு 'வரவேற்க்கத்தக்கது என்றும்
 • ஆனால் மக்கள் அதை சரிவர கடைபிடிக்க வேண்டும்
கொரோனா தொற்று பரவலில், இந்தியாவில் தற்போது தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஏற்கனவே பாரத பிரதமர், நமக்காக தெருவில் இறங்கி சேவை செய்யும் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டும் வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே கைதட்டியும் ஓசை எழுப்பியும் தமது வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறினார். ஆனால் மக்கள் மாறாக வீதிகளில் இறங்கி தனிமைப்படுத்துதல் என்பதை மறந்து குழுக்களாக நின்று ஓசை எழுப்பி கைகளை தட்டியது பலரின் விமர்சனத்திற்கு உள்ளது. 

இந்நிலையில் இன்று இரவு 9 மணிக்கு வீடுகளில் சரியாக 9 மணிக்கு ஆரம்பித்து 9 நிமிடங்கள் அனைவரும் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு அதற்கு பதிலாக தீபங்களை ஏற்றியும் டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டும் நமது ஒற்றுமையை பிரதிபலிப்போம் என்று கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், நடிகர் சாந்தனுவும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். 

பிரதமரின் இந்த அறிவிப்பு 'வரவேற்கத்தக்கது என்றும் ஆனால் மக்கள் அதை சரிவர கடைப்பிடிக்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே நாம் நோய் தொற்றில் இரண்டாவது இடத்தில் இருப்பதால் கவனத்துடன் செயல்படவும் அறிவுறுத்தி உள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com