முகப்புகோலிவுட்

சர்ச்சை கதையில் நடிக்கும் அமலா பால்?

  | October 10, 2019 16:39 IST
Amala Paul

துனுக்குகள்

  • இவர் நடிப்பில் வெளியான ஆடை படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது
  • சமீபத்தில் கார் வாங்கியதில் முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது
  • தற்போது இந்தியில் வெளியான வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக தகவல்
'ஆடை' படத்தினை தொடர்ந்து மீண்டும் ஓர் சர்ச்சைக் கதையில் நடிகை அமலா பால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ஆடை' பென்களின் ஆடை சுதந்திரம் குரித்து பேசியிருந்த இப்படத்தில் அமலா பால் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இது பல்வேறு தரப்பினரிடையே இருந்து ஆதரவும் எதிர்ப்பு ஒரு சேர எழுந்தது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையும் பெற்றது.
 
இதனை அடுத்து சமீப காலங்களில் கார் வாங்கியது, ட்விட்டர் பதிவு என அமலா பால் சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார் இந்நிலையில் பாலுணர்வு தொடர்பான கதைகளம் கொண்ட படம் ஒன்றில் அமலாபால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
 
நெட்பிலிக்ஸ் இணையத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'லஸ்ட் ஸ்டோரீஸ். இந்த படம் பெண்களுக்கான பாலுணர்வு பற்றி பேசிய படம். இந்தியில் வெளியான இந்த வெப் சீரிஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த படத்தில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி படத்தை இயக்கிய நந்தினி இப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.
 
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்