முகப்புகோலிவுட்

லுங்கி கட்டி குத்தாட்டம் போட்ட அமலா பால்

  | January 31, 2019 11:44 IST
Amala Paul Lungi

துனுக்குகள்

  • அமலா பால் கடைசியாக நடித்த படம் ராட்சசன்
  • கார் சர்ச்சையில் சமீபத்தில் சிக்கினார்
  • தற்போது புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்
சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறவர் அமலா பால். அவர் அடிக்கடி புதிது புதிதாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்.  இதனால் அவர் பல எதிர்ப்புகளையும் ஆதரவையும் எதிர்கொண்டு வருகிறார்.
 
 இந்நிலையில் மீண்டும் லுங்கி அணிந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
 
லுங்கியும், டி சர்ட்டும் அணிந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனக்கு லுங்கி பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் அமலா பால். அந்த புகைப்படத்தை பார்த்து சிலர் எதிர்மறையான கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
 
 சனிக்கிழமை இரவு லுங்கி கட்டி ஜாலியாக பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளார் அமலா பால். அந்த புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
 
 அமலா பாலை, லுங்கியை மடித்துக் கட்டி லுங்கி டான்ஸ் ஆடுமாறு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தன் உடைக்காக தன்னை யார் கலாய்த்தாலும் அதை எல்லாம் அமலா பால் கண்டு கொள்ள மாட்டார்.  உடைப்பற்றிய விமர்சனங்களுக்கு  ஏற்கனவே, என் உடம்பு, என் உடை, என் இஷ்டம் என்று அமலா முன்பே தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்