முகப்புகோலிவுட்

வரி ஏய்ப்பு விவகாரத்தில் அமலாபால் மீது நடவடிக்கை?

  | August 29, 2019 14:04 IST
Amala Paul

துனுக்குகள்

 • அமலாபால் சமீபத்தில் நடித்த படம் ஆடை
 • புதுச்சேரியில் இவர் சொகுசு கார் வாங்கியதாக கூறப்படுகிறது
 • இவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கேரள நீதி மன்றம் கூறியுள்ளது
சமீப காலமாக அமலா பால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். காஷ்மீர் பிரிக்கப்பட்ட விவகாரத்தில் காஷ்மீர் காவி உடை போர்த்தியது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தற்போது புதுச்சேரியில் சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் மோசடி செய்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்து.
 
தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருபவர் அமலாபால். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார்.
 
சமீபத்தில் இவர் புதுச்சேரியில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார். கேரளாவில் அந்தக் காரை வாங்கினால் வாகன பதிவு எண் பெறுவதற்காக ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டும். எனவே புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வாடகைக்கு குடியிருப்பதாகக் கூறி போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் காரை அமலாபால் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரூ.18 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
 
கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
 
அதில் அமலாபால் போலி முகவரி கொடுத்து வாகனம் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார் பதிவு செய்தது புதுச்சேரியில் என்பதால் அம்மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பதிவு மோசடி குறித்து புதுச்சேரி போக்குவரத்துத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு இந்த வழக்கை கேரள போலீசார் முடித்துக் கொண்டனர்.
 
இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அமலாபால் மீது மேல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சட்டத்துறைக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டிருக்கிறார். இது குறித்து அமலா பால் தரப்பில் எவ்வித விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com