முகப்புகோலிவுட்

மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படத்தில் அமலா பால்…?

  | May 07, 2019 10:26 IST
Amala Paul

துனுக்குகள்

  • மணிரத்னம் இப்படத்தை இயக்கவிருக்கிறார்
  • லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
  • அமலா பால் முக்கிவேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின இதனைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் அமலா பால் இணைவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நீண்ட ஆண்டுகளமாகவே பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல முக்கிய பிரபலங்கள் முயன்று அது கைவிடப்பட்டிருக்கிறது. தற்போது மணிரத்னம் இதை கையில் எடுத்து இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த கதையில் முக்கிய கதாபாத்திரமான குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின இதனைத் தொடர்ந்து நடிகை அமலா பால் ஒரு கதாபாத்திரத்தில் தேர்வு செய்வதற்கான பேச்சுவார்த்தையை படக்குழு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்