முகப்புகோலிவுட்

‘ராட்சன்’ படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேறும் அமலா பால்!

  | August 16, 2019 17:40 IST
Amala Paul

துனுக்குகள்

 • அமலாபால் நடித்த ஆடை படம் நல்ல வரவேற்பை பெற்றது
 • கிரிக்கெட் விளையாட்டை மைய்யப்படுத்தி உருவாகும் படம் இது
 • இரண்டாவது முறையாக விஷ்ணு விஷாலுடன் இணைகிறார் இவர்
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து இவர் ‘அதோ அந்த பரவைப்போல', ‘கடவர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் அடுத்ததாக மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.
 
இந்த படத்தில் விஷ்ணு விஷால் நதாயகனாக நடிக்கிறார். தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாக இருக்கிறது. நானி நடித்த வேடத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கிறர். ஷ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். கிரிக்கெட் வீரரை பற்றிய உணர்வுபூர்வமான கதையாக இந்த படம் அமைந்திருந்தது.
 
ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால், அமலாபால் இணைந்து நடிக்கிறார்கள். ராட்சன் வெற்றியை இப்படமும் பெற்றுத்தருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து அமலா பால் வெளியிட்ட போட்டோ ஒன்று விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com