முகப்புகோலிவுட்

காஷ்மீருக்கு காவி உடை! அமலாபால் வெளியிட்ட சர்ச்சை புகைப்படம் ! கொதித்தெழும் ரசிகர்கள்!!

  | August 09, 2019 15:46 IST
Amala Paul

துனுக்குகள்

 • அமலா பால் நடித்த ஆடை புகைப்படம் சமீபத்தில் வெளியானது
 • காஷ்மீருக்கு அளித்து வரப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பி,ஜே,பி
 • அமலாபால் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை
பாரளுமன்றத்தில் அவசர அவரசமாக பி.ஜே.பி ஆட்சி காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. இதற்கு அரசியல் விமர்சகர்கள், மனித உரிமை அமைப்புகள் உட்பட பல்வேறு அமைபுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 
நாடு முழுவதும் பி.ஜே.பியினரைத் தவிற மற்ற அமைப்புகள் கட்சிகள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்ற நிலையில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப் பட்டது வரவேற்கத் தக்கது என்று தெரிவித்த அமலா பால் இந்திய வரை படத்தில் காஷ்மீர் தலையில் காவி தலைப் பாகை கட்டியபடி உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே இது போன்ற முடிவுகளை அமலுக்கு கொண்டு வர முடியும் என்று பாராட்டியிருந்தார். அமலா பாலின் பதிவை பார்த்த சமூகவலைதள ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
தொடர்ந்து பல கேள்விகளை முன்வைத்து பின்னூட்டும் அளித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com