முகப்புகோலிவுட்

சினை யானையை கொன்றவருக்கு தகுதியான தண்டனையை கூறும் அமலா பால்.!

  | June 05, 2020 17:33 IST
Amala Paul

"மன்னிக்கவும் சகோதரியே, அவர்கள் மனிதர்கள் என நினைத்தாய், ஆனால் அவர்கள் பேய்கள்"

கேரளாவின் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்தது 15 வயதான யானை ஒன்று கருவுற்று இருந்தது. இந்த நிலையில் உணவுக்காக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு அந்த யானை சென்றுள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த மக்களும் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கியுள்ளனர்.

ஆனால் சில விஷமிகள், சமூக விரோதிகள் அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த பழத்தை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது. இதில் யானையின் நாக்கு மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. ஆனால் இறுதியில் அந்த யானை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பான படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை உலுக்கின.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகை அமலா பால், யானையை வெடி வைத்து கொன்றவருக்கான தகுதியான தண்டனை என தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கர்மா நடவடிக்கை எடுக்க நாம் உண்மையில் காத்திருக்க வேண்டுமா என்று சில நேரங்களில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த தீய செயலுக்கு தகுதியான ஒரே தண்டனை, அதே பட்டாசுகளை அவர்களின் ஆசன வாயில் வைத்து வெடிப்பதுதான். மன்னிக்கவும் சகோதரியே, அவர்கள் மனிதர்கள் என நினைத்தாய், ஆனால் அவர்கள் பேய்கள்” என்று பதிவிட்டுள்ளார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com