முகப்புகோலிவுட்

பாராட்டுகளை பெற்று வரும் அமலாபால் நடித்திருக்கும் ‘ஆடை’ படத்தின் டீசர்!

  | June 19, 2019 16:52 IST
Aadai

துனுக்குகள்

  • ரத்னகுமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • விஜ சுப்ரமணியன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்
  • பிரதீப் குமார் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
கடந்த ஆண்டு வெளியான ராட்சன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து,இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ‘ஆடை'. விஜி சுப்ரமணியன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசை அமைத்திருக்கிறார்.
 
சைலன்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பிரபலங்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறது.
 

இந்த டீசரில் அமலாபால் ஆடை இல்லாமல் பயத்தோடு அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. இப்படியான காட்சியில் நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும் என்று பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறாகள். முன்னதாக இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்