முகப்புகோலிவுட்

அமலா பாலிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்!

  | June 24, 2019 15:26 IST
Amala Paul

துனுக்குகள்

  • ரன் குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • இப்படத்திற்கு பிரதீப் குமார் இசை அமைத்துள்ளார்
  • இப்படத்திற்கு கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
மேயதா மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் அடுத்து அமலா பால் நாயகியாக வைத்து இயக்கி இருக்கும் படம் ‘ஆடை'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்த படம் ஆடை சுதந்திரத்தைப்பற்றி  பேசும் படம் என்பதால் அமலா பால் இப்படத்தின் டீசரில்  ஆடையின்றி நடிக்கும் காட்சி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. அந்த காட்சி பாராட்டுகளையும் பெற்றது.
 
சமீபநாட்களாக வரும் திரைப்படங்களின் டீசர் மற்றம் ட்ரெய்லர்கள் மீம்ஸ் கிரியேட்டர்களால் வடிவேலு வெர்ஷனுக்கு மாற்றப்படுவதை சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது. அதே போல் ‘ஆடை' படத்தின் டீசரையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் வடிவேலு வெர்ஷனுக்கு மாற்றி அமைத்து சமூகலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனைப்பார்த்த இப்படத்தின் இயக்குநர் ரத்ன குமார், இந்த வீடியோவை என்னால் பகிராமல் இருக்க முடியவில்லை மன்னித்து விடுங்கள் அமலா பால் என்று மன்னிப்பு கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்