முகப்புகோலிவுட்

அமலாபால் தயாரித்து நடிக்கும் படத்தில் கண்ணழகி அதுல்யா!!!

  | April 04, 2019 15:04 IST
Cadaver

துனுக்குகள்

  • அமலாபால் இப்படத்தை தயாரித்து நடிக்கிறார்
  • இந்த படத்தில் அதுல்யா இணைந்து நடிக்கிறார்
  • கடவர் என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை அமலாபால். இவர் நடிப்பில் வெளியான முற்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை, விஜய்யுடன் தலைவா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இவர் மலையாளத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
 
நடிப்பதுடன் தற்போது தயாரிப்பாளராகவும் தன்னை மேம்படுத்தியிருக்கிறார் அமலாபால். “அமலா ஹோம் புரொடக்ஷன்" என பெயர் வைக்கப்பட்டுள்ள இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக “கடவர்” எனும் திரைப்படத்தை தயாரித்து நடித்தும் நடிக்கவும் இருக்கிறார். இந்த படத்தில் இவர் தடயவியல் நிபுணராக நடிக்கிறார். இவருடன் இந்த படத்தில் நடிகை அதுல்யாவும் நடிக்கவிருக்கிறார் என்கிற  அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்