முகப்புகோலிவுட்

அமேசான் Prime-ல் வெளியாகும் ‘சைலன்ஸ்’, ரூ.26 கோடிக்கு விற்பனை.?

  | May 18, 2020 11:06 IST
Nishabdham Ott Release

டிஜிட்டல் மேடையில் நேரடி வெளியீட்டைப் பெறும் முதல் பெரிய தெலுங்கு படமாக ‘நிசப்தம்' இருக்க வாய்ப்பு உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா ஷெட்டிக்கு கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் ‘சாய் ரா' திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ‘சைலன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.

இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி பல மொழிகளில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டுதலில் இருப்பதால், வெளியீட்டை ஒத்திவைத்துள்ள தயாரிப்பாளர்கள், புதிய ரிலீஸ் தேதியையும் இன்னும் அறிவிக்கவில்லை.

சஸ்பென்ஸ்-த்ரில்லரான இப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என்று சமீபத்தில் வதந்திகள் பரவின. இருப்பினும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்ட்ரி, அந்த அறிக்கைகளை ஆதாரமற்ற வதந்திகள் என்று கூறியது.

இந்நிலையில், OTT தளத்தில் ‘சைலன்ஸ்' நேரடி வெளியாவது உறுதியாகிவிட்டதாகவும், முன்னணி OTT இயங்குதளமான அமேசான் பிரைம் வீடியோ இப்படத்தின் ஸ்கிரீனிங் உரிமையை ரூ. 26 கோடிக்கு வாங்கிவிட்டதாகவும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மையாகிவிட்டால், டிஜிட்டல் மேடையில் நேரடி வெளியீட்டைப் பெறும் முதல் பெரிய தெலுங்கு படமாக ‘நிசப்தம்' இருக்கும்.

ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நிசப்தம்'. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகியுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ‘சைலன்ஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com