முகப்புகோலிவுட்

“விஜயகாந்தை செதுக்கியவர் ராவுத்தர்” – இயக்குநர் அமீர் பேச்சு!

  | August 22, 2019 19:25 IST
Ameer

துனுக்குகள்

 • ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிக்கும் படம் இது
 • இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அமீர் காரசார பேச்சு
 • இயக்குநர் அமீர் தொடர்ந்து தமிழ் தேசிய செயற்பாட்டாளராக இயக்கி வருகிறார்
ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்பு 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இதில் ஆரி ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
 
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தைச் சார்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அமீர்,
 
‘நான் இந்த விழாவிற்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று ஆரியின் வற்புறுத்தல், இரண்டாவது ராவுத்தர் பிலிம்ஸ். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் புகழ் நிரந்தரமில்லை.
 
இப்ராஹிம் ராவுத்தர் மிக எளிமையான மனிதர். அவர் இன்று இருந்திருந்தால் இந்த அரங்கத்தில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்திருப்பார்கள். மேடை நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்திருக்கிறது. விஜயகாந்திற்கு 'கேப்டன்' என்று பெயர் வைத்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக அவரை செதுக்கியவர் ராவுத்தர். அப்படி இருந்த நண்பர்கள் ஏன் பிரிந்தார்கள்? சினிமா அவர்களைப் பிரித்து விடும். அதேபோல் தான் நானும் பாலாவும். திரைத்துறையில் நன்றி என்பது இருக்காது. அப்படியே இருந்தாலும் அது ஊசி அளவு தான் இருக்கும் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே, நன்றியுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்” என்றார்.
 

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்