முகப்புகோலிவுட்

கமல் ஹாசன் கொடுத்த பரிசு; இனிய நினைவைப் பகிர்ந்த அமெரிக்க நடிகை!

  | May 20, 2020 14:28 IST
Mckenzie Westmore

கமல் ஹாசன் “இந்திய சினிமாவில் மிகப்பெரிய பெயர் கொண்டவர். எந்த அமெரிக்க நடிகரையும் விட பெரியவர்” - மெக்கென்ஸி

அமெரிக்க நடிகை மெக்கென்ஸி வெஸ்ட்மோர் உலகநாயகன் ரசிகர்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியத்தை அளித்துள்ளார். ‘பேஷன்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் ‘ஷெரிடன் கிரேன் லோபஸ்-ஃபிட்ஸ்ஜெரால்டு' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக பிரபலமான இந்த நடிகை, பிரபல ஹாலிவுட் மேக்கப் (அலங்காரம்) கலைஞரான மைக்கேல் வெஸ்ட்மோரின் மகளும் ஆவார். அவர், தன்னையும் அவரது தந்தை பற்றிய அன்பான நினைவகத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மெக்கென்ஸி தனது ஒரு த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவரும் அவரது தந்தையும் கமல்ஹாசன் பரிசளித்த உடைகளை அணிந்திருக்கிறார்கள். அந்த புகைப்படத்துடன், “எனக்கு கமல் ஹாசனை நன்றாகத் தெரியுமா என்று பலர் கேட்டிருக்கிறார்கள், இங்கே பாருங்கள். நான் ஒரு சிறு பெண்ணாக இருந்தபோது என் அப்பா அவரது ஒப்பனைகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், ஆனால் கடைசியாக நான் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கமலை பார்த்தேன். 2வது புகைப்படம் கமலின் பரிசாக எங்களுக்கு வழங்கப்பட்ட அழகான ஆடைகளில் நானும் என் அப்பாவும்” என்று தன் நினைவுகளைப் பதிவிட்டுள்ளார்.

மெக்கென்ஸியின் இந்த பதிவிற்கு, கமல் ஹாசனைப் பற்றி அறிந்திராத நெட்டிசன் ஒருவர், இவர் யாரென்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இருவரும் மீண்டும் இணைந்து அருமை என்று பதிவிட்டிருந்தார், அதற்கு உடனடியாக கமெண்டில் பதிலளித்த மெக்கென்ஸி “அவர் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பெயர் கொண்டவர். எந்த அமெரிக்க நடிகரையும் விட பெரியவர்” என்று கூறியுள்ளார். மேலும் மற்றொரு நபர், அவர் படங்களில் நடிக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என வாழ்த்தியதற்கு, “அது என் கனவு” என்றுள்ளார் மெக்கென்ஸி.  

கமல்ஹாசனின் ‘தசாவதாரம்' திரைப்படத்தில் மைக்கேல் வெஸ்ட்மோர் இணைந்து பணியாற்றியுள்ளார். முன்னதாக, வெஸ்ட்மோர் ‘அவ்வை சன்முகி' படத்தில் தனது ஒப்பனை குறித்து கமல் ஹாசனுக்கு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். வெஸ்ட்மோர் ‘ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், டீப் ஸ்பேஸ் நைன், வாயேஜர் மற்றும் எண்டர்பிரைஸ் போன்ற படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com