முகப்புகோலிவுட்

“நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை' - அமிதாப் பச்சன் அதிரடி!

  | October 10, 2019 14:38 IST
Amitabh  Bachchan

துனுக்குகள்

  • உயர்ந்த மனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்
  • இந்த படத்தை தமிழ்வாணன் இயக்கி இருக்கிறார்
  • பத்திரிகையாளர் சந்திப்பில் பச்சன் என்ற பெயர் சாதி இல்லை என கூறியுள்ளார்
தன் பெயருக்கு பின்னாடி இருக்கும் பச்சன் என்ற சொல் தன்னுடைய குடும்பப் பெயர் என்றும். அதற்கு சாதி,மதம் சாயம் இல்லை என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
 
இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் வாழும் இந்து மக்கள் தங்களது பெயருக்கு பின்னால் சாதி பெயர் போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த நிலை இருந்தது என்பதுதான் வரலாறு. எல்லா வற்றிலும் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழகம் சாதி எதிர்ப்பு களத்திலும் முதன்மையாகவே இருந்து வந்துள்ளது. தமிழகத்தில் தந்தை பெரியார் நடத்திய புரட்சிக்கு பிறகு தமிழகத்தில் சாதியை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதை பெரும்பான்மையான மக்கள் தவிர்த்தனர். அது இன்று வரை தொடர்கிறது.  சினிமா திரையுலகில் பல வேறு மொழி மாநிலங்களில் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்ளது பெயருக்கு பின்னால் தங்களுடைய சாதி பெயரை போட்டுக்கொள்வதை இன்றும் வழக்கமாக வைத்துள்ளனர்.

மலையாள நடிகைகளில் சிலர் தங்கள் பெயருடன் சாதி பெயரையும் இணைத்தே வைத்திருக்கின்றனர். அவர்களில் பூ பார்வதி மேனன் தனது பெயரில் சாதி இணைப்பு தேவையில்லை என்று கூறி மேனன் என்று கூறுவதை கைவிட்டுவிட்டார். இந்த நிலையில் அமிதாப் பச்சனின் பெயர் பற்றி சிலர் சர்ச்சை எழுப்பினார்கள். சமூக அக்கறையோடு எல்லா விஷயங்களையும் பேசும் நீங்கள் (அமிதாப்) பெயருக்கு பின்னால் பச்சன் என்று சாதி பெயரை வைத்துக் கொள்ளலாமா என்று விமர்சித்து வந்தனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமிதாப் இது குறித்து பேசும் போது.
“'பச்சன் என்பது எனது குடும்ப பெயர். எந்த மதத்தையும், சாதியையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்து கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது என் தந்தையிடம் குடும்ப பெயர் குறித்து கேட்டனர். அப்போது பச்சன் என்பதை குடும்ப பெயராக வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது கூட மதம் பற்றி என்னிடம் கேட்பார்கள். அவர்களிடம் நான் இந்தியன் என்று கூறுவேன். நான் எந்த மததையும் சேர்ந்தவன் இல்லை' என்றார்.
 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்