முகப்புகோலிவுட்

அனைவரையும் வியக்க வைத்த அமிதாப் பச்சன்!

  | June 18, 2019 21:18 IST
Amitabh Bachchan

துனுக்குகள்

  • தமிழ்வாணன் இயக்கும் படத்தில் இவர் நடித்து வருகிறார்
  • ரூமி ஜாப்ரியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சேரே
  • எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் இவர்
‘கள்வனின் காதலி' திரைப்படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் தமிழில் உருவாகும் ‘உயர்ந்த மனிதன்' திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் நடிகர் அமிதாப் பச்சன்.  
 
இதனைத் தொடர்ந்து அவர் ரூமி ஜாப்ரியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேரே' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘சேரே' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் கடைசி காட்சி ஜூன் 16-ந்தேதி படமாக்கப்பட்டது. இந்நிலையில் ரசூல் பூக்குட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அமிதாப் பச்சன் குறித்து ஸ்வாரஸ்யமான விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார்.
 
“நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள், இந்திய சினிமாவில் மற்றொரு வரலாற்றை பதிவு செய்துள்ளார். ‘சேரே' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின், கடைசி நாள் அவர் ஒரே ஷாட்டில் பதினான்கு நிமிட நீள காட்சியை நடித்தார், ஒட்டுமொத்த படக்குழுவினரும் எழுந்து நின்று கைதட்டினர்.டியர் சார், சந்தேகமே இல்லாமல் நீங்கள் உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவர்'' என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்