முகப்புகோலிவுட்

உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் அமிதாப் பச்சன்!

  | October 18, 2019 11:43 IST
Amitabh Bacchan

துனுக்குகள்

 • கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர்
 • கடந்த 3 நாட்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
 • உறவினர் மட்டுமே இவரை பார்க்க அனுமதிப்பப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன
amitabh bacchan: கல்லீரல் பிரச்னை காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். கடந்த 1982ல் நடந்த ஒரு விபத்தின் போது, அமிதாப்புக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் 'ஹெப்பாடிடீஸ் பி' வைரஸ் இருந்துள்ளது. இந்த ரத்தம் அவருக்கு செலுத்தப்பட்டதன் விளைவாக, அவரது கல்லீரல் 75 சதவீதம் செயல் இழந்தது என மருத்துவர்கள் கூறினார்கள்.அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அவருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது.
 
இருப்பினும் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது, தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என சுறுசுறுப்புடன்  இயங்கி வந்தார். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சைரா நரசிம்ம ரெட்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுன் நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
 
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று நள்ளிரவு 2 மணிக்கு அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடல் நலம் பெற்று மீண்டும் சுறுசுறுப்பாக வருவார் என அனைவரும் ஆருதல் தெரிவித்து வருகிறார்கள்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com