முகப்புகோலிவுட்

'கமலியாக மாறிய ஆனந்தி' - நாளை வெளியாகும் கமலி from நடுக்காவேரி டீஸர்

  | March 13, 2020 12:00 IST
Anandhi Kayal

துனுக்குகள்

 • நடித்து நல்ல நடிகை என்ற பெயரை தக்கவைத்து வருகின்றார்
 • ஏஞ்சல், ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்
 • ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கமலி from நடுகவேரி
'Ee Rojullo' என்ற தெலுங்கு படத்தின் மூலன் அறிமுகமானவர் தான் நடிகை ஆனந்தி. ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் 2014ம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கயல் என்ற திரைப்படம் இவருக்குத் தமிழில் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. இந்த படத்தில் நடித்ததற்காகத் தமிழக அரசு வழங்கும் மாநில சிறப்பு விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். 

சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு போன்ற பல படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரைத் தக்கவைத்து வருகின்றார். பெரிய அளவில் முன்னணி நடிகை என்ற இடத்தை பெறவில்லை என்றபோதும் இவர் நடிக்கும் படங்களில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டும் வண்ணமே நடித்து வருகின்றார். இந்த வருடம் இவர் நடிப்பில் டைட்டானிக், எங்கே அந்த வான், ஏஞ்சல், ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.         

மேலும் புதுமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவியாக ஆனந்தி நடித்துள்ளார். படக்குழு அறிவித்துள்ளது போல வரும் ஏப்ரல் 17ம் வெளியாகும் இந்த திரைப்படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com