முகப்புகோலிவுட்

அதான் 'கொஞ்ச வருஷம்' ஆகிடுச்சுல்ல..! - கிண்டலடித்த விஷ்ணு, சிறப்பாக சமாளித்த ராணா..!

  | August 11, 2020 12:02 IST
Vishnu Vishal

துனுக்குகள்

  • இந்நிலையால் அண்மையில் தனது திருமண் குறித்து மனம் திறந்த ராணா
  • தற்போது இந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால்
  • ராணாவும் விஷ்ணுவும் நல்ல நண்பர்கள் என்பது பலரும் அறிந்ததே
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகனாக சென்னையில் பிறந்தவர் தான் பிரபல 
நடிகர் ராணா தகுபதி. 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் அவர் நேரடியாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை தயாரித்தது AVM productions நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராணா 2015ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் பல்லாளதேவனாக வந்து பலரை ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார். அந்த படத்தின் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. 

இந்நிலையால் அண்மையில் தனது திருமண் குறித்து மனம் திறந்த ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை மணக்க உள்ளதாக அறிவித்தார். அவர் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் ஆவார். கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சில நடிகர் நடிகைகள் முன்னிலையில் அவர்களது திருமணம் இனிதே நடந்து முடிந்தது. 

தற்போது இந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால் "கொஞ்ச வருஷத்துக்கு முன்பு ஒருவர் என்னிடம் நான் கல்யாணம் செய்துகொள்ள போவதில்லை என்று கூறினார். ஆனால் அவர் தற்போது திருமணம் செய்துகொண்டார் என்று கூறி ராணாவின் திருமண புகைப்படங்களை பதிவிட... "அதான் கொஞ்சம் வருஷம் ஆகிடுச்சுல்ல.." என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் ராணா. ராணாவும் விஷ்ணுவும் நல்ல நண்பர்கள் என்பது பலரும் அறிந்ததே என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com