முகப்புகோலிவுட்

'இனிதே முடிந்தது நிச்சயதார்த்தம்..!!' - 'பாகுபலி நடிகர் கொடுத்த அடுத்த அப்டேட்..'

  | May 21, 2020 18:38 IST
Rana Daggubati

துனுக்குகள்

  • பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தகுபதி சுரேஷ் பாபுவின் மகனாக
  • இந்நிலையால் அண்மையில் தனது திருமண் குறித்து மனம் திறந்த ராணா
  • இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தங்களுடைய நிச்சயதார்த்தம்
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபுவின் மகனாக சென்னையில் பிறந்தவர் தான் பிரபல 
நடிகர் ராணா தகுபதி. 2010ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் அவர் நேரடியாக ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை தயாரித்தது AVM productions நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராணா 2015ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் பல்லாளதேவனாக வந்து பலரை ஆச்சரியத்தில்  ஆழ்த்தினார். அந்த படத்தின் அவருடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. 

இந்நிலையால் அண்மையில் தனது திருமண் குறித்து மனம் திறந்த ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை மணக்க உள்ளதாக அறிவித்தார். அவர் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் ஆவார். தங்களது காதலை அறிவித்த ராணா தற்போது அனைவருக்கும் அடுத்த அப்டேட் கொடுத்துள்ளார். 

இன்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தங்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றதை குறித்து கூறியுள்ளார். விரைவில் அவர்களது திருமணம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ராணா தற்போது தமிழ் மற்றும் பிற மொழிகளில் வெளியாக இருக்கும் காடன் மற்றும் மடை திறந்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com