முகப்புகோலிவுட்

'இவளே எங்கள் உலகம்' - மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய தந்தை நகுல்..!

  | August 04, 2020 10:16 IST
Nakkhul

துனுக்குகள்

 • 2003ம் ஆண்டு வெளியான சங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில்
 • நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த பாடகராகவும் அவர் திகழ்ந்து வருகின்றார்
 • இந்நிலையில் கடந்த 2ம் தேதி நகுல் தந்தையாக பதவி உயர்வு அடைந்துள்ளார்
2003ம் ஆண்டு வெளியான சங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த பிரபலங்கள் பலர். நடிகர் சித்தார்த், நகுல், பரத் நடிகை ஜெனிலியா மற்றும் இசையமைப்பாளர் தமன் என்று அந்த படத்தில் அறிமுகமான பலர் பின்னர் திரையுலையில் நல்ல நிலையில் உள்ளனர். குறிப்பாக நடிகர் நகுல். பிரபல நடிகை தெய்வயானியின் தம்பி இவர் என்பது பலரும் அறிவர். 2003ம் ஆண்டு பாய்ஸ் படத்திற்கு பிறகு தெலுங்கில் Keelu Gurram ஏமாற்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தில் மூலம் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். 

நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த பாடகராகவும் அவர் திகழ்ந்து வருகின்றார். விக்ரமின் அந்நியன் படத்தில் வந்த 'காதல் யானை வருகிற ரெமோ பாடல்', உலக நாயகனின் வேட்டையாடு v விளையாடு படத்தில் வெளியான மஞ்சள் வெயில் உள்ளிட்ட பாட்டுக்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது நிலவும் ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நடிகர்கள் தங்கள் குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி நகுல் தந்தையாக பதவி உயர்வு அடைந்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் இதை அறிவித்த அவர் "இவள் வருகையால் எங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com