முகப்புகோலிவுட்

'தொடங்கியது வெண்பாவின் பயணம்..!!' - OTT தளத்தில் வெளியானது 'பொன்மகள் வந்தாள்'

  | May 29, 2020 07:29 IST
Ponmagal Vandhaal

துனுக்குகள்

  • ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதல் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு
  • இப்படத்தில் ஜோதிகாவுடன் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் பொத்தன்
  • OTT தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்
பிரபல நடிகை ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் முதல் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. இப்படத்தை JJ Fredrick எழுதி இயக்குகிறார். இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் அதன் 9-வது திரைப்படமாக தயாரிக்கிறது. இப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இப்படத்தில் ஜோதிகாவுடன் இயக்குநர் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் பொத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் கொரோனா காரணமாக படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் இந்த படம் தற்போது OTT தளத்தில் வெளியாகியுள்ளது. குறைந்த அளவிலான பட்ஜெட் கொண்ட படங்களுக்கு இந்த தளம் பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com